Header Ads

Header Ads

புளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம்

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

புளொட் நெடுமாறன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒருவருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2014.08.11அன்று சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இன்றைய தினம் வழக்கு தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்டு வழக்கினை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த எதிரி தனது உடமையில் துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் கண்டு 2வருடம் கடூழியச்சிறைத் தண்டனை விதித்ததுடன் வழக்கை 7 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன் 5ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டப்பணம் செலுத்தத் தவறிமையால் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தினார்.

No comments:

Powered by Blogger.