கதறிய சிறுமியை கண்டுகொள்ளாத அப்பா: உயிரிழந்த பரிதாபம்
புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை காப்பாற்றும் படி கெஞ்சியும், அதற்கு அவர் தந்தை உதவாததால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரபிரதேசத்தின் விஜயவாடாவை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ (13) இவருக்கு எலும்பு புற்று நோய் இருந்துள்ளது.
அவரின் நோயை குணப்படுத்த மருத்துவ சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது.
இதையடுத்து தனது வீட்டை விற்று சாய் ஸ்ரீ-யின் சிகிச்சைக்கு பணம் தயார் செய்ய அவர் அம்மா முடிவெடுத்துள்ளார்.
ஆனால், மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து வாழும் சாயின் தந்தை வீட்டை விற்க ஒத்து கொள்ளவில்லை.
இதையடுத்து, சிறுமி சாய் தனது தந்தையிடம், தன் உயிரை காப்பாற்ற பணம் தருமாறு கெஞ்சி அதை வீடியோவாக பதிவு செய்து அவருக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால் அதன் பிறகும் அவர் தந்தை வீட்டை விற்க ஒத்து கொள்ளவில்லை.
இந்நிலையில், புற்று நோயின் தாக்கம் அதிகமாகி சிறுமி சாய் ஸ்ரீ இரு தினங்களுக்கு முன்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி சாய் ஸ்ரீ, தன் தந்தையிடம் சிகிச்சைக்கு பணம் வேண்டி கெஞ்சிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது
No comments: