பிரித்தானியா தாக்குதல்: பொலிஸ் வேட்டையில் தெற்கு மான்செஸ்டரில் 3 பேர் கைது
பிரித்தானியா மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சிக்கி 8 வயது சிறுமி உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லிபியாவில் இருந்து அகதியாக பிரித்தானியாவிற்கு வந்த 22 வயதான சல்மான் அபேதி என்ற இளைஞரே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், தெற்கு மான்செஸ்டரில் 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
இதேசமயம் மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மான்செஸ்டர் உட்பட பிரித்தானியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments: