பிரித்தானியாவில் மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல் - அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்
பிரித்தானியாவின் சால்போர்டு பல்கலைகழகத்தில் மர்ம பை ஒன்று இருந்துள்ளதால், கல்லூரியில் உள்ள மாணவர்கள் அவசர அவரசமாக வெளியேற்றப்பட்டனர்
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள Salford பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்தின் அருகில் மர்ம பை ஒன்று இருந்துள்ளது.
இதனால் அங்குள்ள கட்டடங்களான New Adelphi, Lady Hale மற்றும் Clifford Whitworth நூலகத்தில் உள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்
மர்ம பை உள்ளதை உறுதி செய்த பொலிஸார் அதனை மீட்கும் வகையில் குறித்த பகுதிக்கு விரைந்தனர்
மேலும் மாணவர் ஒருவர் மர்ம பை காரணமாகவே அனைவரும் வெளியேற்றப்பட்டு வருவதாக டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் உள்ள மான்செஸ்டர் அரென அரங்கில் பயங்கரவாதிகள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டும் 119 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இதுபோன்ற பல வெடிப்புகள் இடம்பெறும் என பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டமையால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
No comments: