ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் மூலம் புகழ் பெற்ற நடிகர் சர் ரோஜர் மூர் இன்று காலமானார். 89 வயதாகும் அவர் ஏழு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். அதில் Live and Let Die, A View to a Kill போன்ற படங்களும் அடக்கம்.
இவர் கேன்சருடன் போராடி வந்ததாகவும் மிக குறுகிய காலத்திற்கும் கேன்சர் அவர் உயிரை பறித்துவிட்டது என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் இறந்த சர் ரோஜர் மூரின் இறுதி சடங்கு மொனாகோவில் நடக்கவுள்ளது. அதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளவுள்ளனர்.
No comments: