எனக்கு 47... உனக்கு 26!! இந்தப்பெண்ணின் மீது கார் ஏற்றி பயங்கர கொலை
அறிவியல் முன்னேற்றம் வளர, வளர அதனால் பல முன்னேற்றங்கள் கிடைத்தாலும், மறுபக்கம் பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.
குறிப்பாக, தகவல் தொடர்பு அறிவியல் முன்னேற்றங்களால், பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
எனவே, இளம் பெண்கள் தொடங்கி குடும்ப பெண்கள் வரை, இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
சில நாட்களுக்கு முன்பு, முகநூல் மூலம் அறிமுகம் ஆன 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும், சென்னை அண்ணா நகரில் பள்ளி ஆசிரியை கார் ஏற்றி கொல்லப்பட்டதும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பால் ஏற்பட்ட துயரம் என்பதை மறுப்பதற்கில்லை.
எனவே, சிறுமிகள் முதல், குடும்ப பெண்கள் வரை, முகநூல் மற்றும் வாட்ஸ் அப் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக, முகம் தெரியாத, அறிமுகம் இல்லாத எந்த ஆண்களிடமும் நட்பு தேவை இல்லை என்பதில் உறுதியாக இருப்பதே பாதுகாப்பு. சுய பாதுகாப்பை விட, பெண்களுக்கு பெரிய பாதுகாப்பு எதுவும் இல்லை.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த பள்ளி ஆசிரியை நிவேதா என்பவர், கார் ஏற்றி கொலை செய்யப்பட்டிருப்பதன் பின்னணியிலும், முகநூல் நட்பே உள்ளது என்பதே இதற்கு உதாரணம்.
தீயணைப்பு துறையில் டிரைவராக இருக்கும், இளையராஜா என்பவருக்கும் நிவேதாவுக்கும், முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் அதுவே காதலாக மாறி உள்ளது.
அதேபோல், முகநூல் மூலம் கணபதி என்பவருக்கும், நிவேதாவுக்கும் ஏற்கனவே நட்பு இருந்திருக்கிறது. கணபதிக்கு பண உதவி செய்யும் அளவுக்கு, நிவேதாவின் நட்பு வளர்ந்துள்ளது.
இந்நிலையில், கணபதியுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த நிவேதாவை நேரில் பார்த்த இளைய ராஜா, ஆத்திரத்தில் தாம் வந்த காரை நிவேதா மீது ஏற்ற அவர் உயிர் இழந்துள்ளார். இதையடுத்து, இளைய ராஜா, கணபதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், நிவேதாவின் உயிர் திரும்பி வரப்போவதில்லை. அதேபோல், முகநூல் மூலம் அறிமுகமாகி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியும், பாதிப்பில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.
ஆகவே, முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் களங்கத்தில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள, பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.
No comments: