64 வயதான பெண்ணை மணந்த 39 வயதான இமானுவல் மார்கோன்! இன்று பிரான்ஸ் ஜனாதிபதியானார்!
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவு கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோங்-கும், தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரைன் லெ பென்னும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில், இறுதி சுற்றுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கி நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, இன்று மாலை வாக்கு எண்ணும் நடவடிக்கையின் முடிவில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: