நடிகர் அஜித் பெண்கள் விஷயத்தில் இப்படியா? அதிரடியாக பிரபல நடிகை வெளியிட்ட தகவல்
நடிகர் அஜித் பெண்களை மதிப்பதில் சிறந்தவர் எனவும், தற்போதைய இளைஞர்கள் அவரிடம் இருந்து இதனை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். நடிகர் அஜித் சிறந்த மனிதர் என அவருடன் நடித்த பல நடிகைகள் இதற்கு முன்னர் கூறியுள்ளனர்.
நேர்மை, எளிமை போன்ற காரணங்களால் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அவர் தற்போது விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தீவிரமாக உழைத்து தனது உடம்பை குறைத்து நடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் நடிகை காயத்ரி ரகுராமிடம் அஜித்தை பற்றி டுவிட்டரில் கேட்டுள்ளார். பொதுவாக சில நடிகைகள் ரசிகர்களுடன் டுவிட்டரில் அவ்வப்போது உரையாடுவார்கள்.
அப்போது அஜித்தை பற்றி கேட்ட கேள்விக்கு நடிகை காயத்ரி ரகுராம், தல அஜித் ஒரு சிறந்த மனிதர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லா இளைஞர்களும் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
No comments: