பண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்களாம்!
ரிஷபம், கடகம், கன்னி, மகரம், மீனம் மற்றும் ஒற்றை இராசிகளான துலாமும், கும்பமும் பண்பான இராசிகளாகும்.
இந்த இராசிகள் எப்போதும் தன் பழக்க வழக்கத்தை செம்மைபடுத்திக் கொள்வதோடு உலகாயத்த விஷயங்களில் மற்றவர்களோடு அல்லது தான் சார்ந்தவர்களின் மனம், மரியாதை குறையாத அளவுக்கு நடந்து கொள்வதோடு, சமூகத்திற்கு ஒத்துப்போகக்கூடிய பழமை மாறாத பண்பாடு கொண்டதாக அமையும்.
ரிஷபம்
ரிஷபம் அன்னம் பரிபாலிக்கும் அற்புத கேந்திரம். ஆகையால் இந்த இடத்தில் விருந்தினர் உபசரிப்பு, வீட்டில் இருப்பவர்களின் தேவை மற்றும் உயர்வு, வருவோரின் மனம் மாறும் குணம் கொண்ட இயல்பான பண்புகள் மேலோங்கி நிற்கும்.
கடகம்
கடகம் இந்த இராசிக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய குணம் நிறைய இருந்தாலும் குழந்தைகளின் தேவையை எப்பாடு பட்டாவது பு ர்த்தி செய்யும் குணம் மேலோங்கி நிற்கும். சந்ததி விருத்தியிலும், அவர்கள் முன்னேற்றத்திற்காகவும் தன்னுடைய பண்பாட்டை செம்மைப்படுத்தும்.
கன்னி
கன்னி ஆலய வழிபாட்டைவிட தன் தாய்தந்தையரின் நலன் பேணுதலில் அக்கறை உண்டு. அவர்களின் விருப்பம்போல் தன் பாதையை தௌpவுபடுத்தி குறையில்லா நிறைவோடு கொண்டு செல்லும்.
மகரம்
மகரம் சிறிய வயதில் பெரிய பொறுப்புகளை சுமக்கும். சுமைதாங்கி என்று சொல்லும்போது கர்மயோகியாக வாழ்ந்தாலும் தன்னை சார்ந்த தன் குடும்பத்தின் தேவையை மனம் கோணாமல் பிரதிபலன் எதிர்பாராமல் செய்து கொண்டு இருக்கும் பண்பு மேலோங்கி இருக்கும்.
மீனம்
மீனம் எப்போதும் தன்னுடன் யாராவது இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அவ்வாறு மனைவியாக இருப்பினும், மற்றவர்களாக இருப்பினும் அவர்களின் நலன் கருதும் பண்பு மேலோங்கி காணப்படும்.
துலாம்
துலாம் இயற்கையிலேயே வர்த்தக ரீதியான பொறுப்புகளில் இருக்கும்போது தான் சார்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களின் தேவைக்காக மனம் வாடாத நிலையில் பண்பாடு காக்கும்.
கும்பம்
கும்பம் குறைவில்லா நிறைவு இருப்பதை குணம் மாறாமல் தன் மனைவிக்கும், மக்களுக்கும், உடன் பிறந்தோரின் மனம் குன்றாமல் செய்து பண்பாட்டை வளர்க்கும்.
No comments: