சென்னையில் லைக்கா புதிய மருத்துவ மையம் திறந்து வைப்பு. ரஜனி, ஷங்கர் கலந்து கொண்டனர்!
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஹெல்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவ மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் லைக்கா ஹெல்த்தின் தலைவி பிரேமா சுபாஸ்கரன் லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி லைக்கா ஹெல்த்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் மன்பிரீட் குலாத்தி, ஆகியோர் உட்பட லைக்கா குழுமத்தின் உயர் அதிகாரிகளும் இந்திய மருத்துவத்துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.
லைக்கா ஹெல்தின் வெஸ்ட் மின்ஸ்டர் மருத்துவ மையத்தை சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்த திறப்புவிழா நிகழ்வில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் ஆகிய பல திரைத்துறை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்
லைக்கா குழுமத்தில் ஒன்றான லைக்கா ஹெல்த் இன் இந்த சிகிச்சைநிலையத்தில் பரிசோதனை, மருத்துவஆலோசனை மற்றும் சிகிச்சை என்பன அதி நவீன தரத்தில் வழங்கப்படவிருக்கிறது. மேலும் அடுத்து வரும் 5 வருட காலத்தில் மருத்துவம் மற்றும் நோய் கண்டறியும் விடயத்திற்காக மேலதிகமாக 100 மில்லியன்ஸ் பவுண்ஸ் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
வெஸ்ட் மின்ஸ்டர் கெயார் ஹெல்த் கெயார் திட்டத்தின் அங்கமாக வெளிநோயாளர்களுக்கு மருத்துவசேவையை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவநிலையம் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஹெல்த்தின் முதலாவது மையம் என்பதுடன் சென்னை மாநகரின் மையப் பகுதியில் 70000 சதுர அடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
லைக்கா ஹெல்த்தின் புதிய மருத்துவ மையம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது:-
லைக்கா ஹெல்தின் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற பெயரிலான மருத்துவசேவை மையம் இன்று சென்னையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அன்றாட வைத்திய சுகாதார சேவைகளை வழங்கும் லைக்கா ஹெல்த்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவ மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவசேவைகளின் முதன்மை இடமாகச் சென்னை கருதப்படுவதாலேயே தமது மருத்துவ மையத்தை சென்னையில் அமைத்ததாக, லைக்கா கெல்த்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர் மன்பிரீட் எஸ் குலாத்தி தெரிவித்துள்ளார்.
இம்மருத்துவ மையத்தை நிறுவுவதற்காக இதுவரை 17 மில்லியன் பவுண்ஸ் செலவிடப் பட்டிருப் பதாகவும் 50 பணியாளர்கள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள டொக்டர் மன்பிரீட் குலாத்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மேலும் 100 மில்லியன் பவுண்ஸ்களை முதலீடு செய்ய தாம் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லைக்கா ஹெல்த் ஏற்கனவே இரண்டு மருத்துவ மையங்களை இங்கிலாந்தில் செயற்படுத்தி வருகிறது. சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த மருத்துவ மையம் எதிர்காலத்தில் மும்பை,ஹைத்தராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விஸ்தரிக்கப்பட இருப்பதாகவும் லைக்கா ஹெல்த் தெரிவித்துள்ளது.
No comments: