கிளிநொச்சி ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் சமையல் எரிவாயு பாரவூர்தி ஒன்றும் சுற்றுலா பஸ் மற்றும் வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஏ9 பிரதான வீதியில் பாதசாரி கடவையில் நபர் ஒருவர் திடீரென கடக்க முற்பட்ட போது முன்னால் சென்ற வேன் மற்றும் பஸ் என்பன சடுதியாக நிறுத்தி போது அதே திசையில் பயணித்த சமையல் எரிவாயு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியது.
இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு, வாகனங்கள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: