இலங்கையின் பல பகுதிகளில் அபாயம்..! மக்களிற்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
தற்போது பெய்து வரும் அடை மழையினால் களுகங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, பெல்மடுல்ல, குருவிட்ட, எஹலியகொட, கிரிஎல்ல, மற்றும் இம்புல்பே பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹ_பிட்டிய மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் மக்கள் மண்சரிவு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய காலநிலை நிலவினால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
No comments: