பிரித்தானியா மான்செஸ்டர் நோக்கி விரைந்த இராணுவம்!
மான்செஸ்டர் பகுதியில் உள்ள கல்லூரிக்கு அருகில் இராணுவத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே குறித்த பாதையில் பயணிப்பதை தவிர்க்குமாறு அந்த பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட கல்லூரி அமைந்துள்ள இடத்தில் பொலிஸார் பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கல்லூரிக்கு அருகில், இராணுவ வெடி குண்டு அகற்றல் குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தற்போது மதிப்பிட்டு வருவதாக மான்செஸ்டர் பொலிஸார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
குறித்த கல்லூரியில் வெடிகுண்டு ஒன்று இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இராணுவ வெடிகுண்டு அகற்றல் பிரிவினர் அங்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
பிரித்தானியா மான்செஸ்டர் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என மான்செஸ்டர் பொலிஸார் டுவிட் செய்துள்ளனர்.
மேலும்,ட்ரெபட் கல்லூரிக்கு அருகில் இராணுவம் குவிக்கப்படவில்லை என்றும் ஹல்மே பகுதியிலேயே குவிக்கப்பட்டிருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பாதுகாப்பான நிலையிலேயே அந்த பகுதி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறிப்பிடப்பட்டிருந்த இந்த தகவல்களால் ஏதேனும் குழப்ப நிலை உண்டாகியிருப்பின் தவறுகளுக்கு வருந்துவதாக மான்செஸ்டர் பொலிஸார் மன்னிப்பு கோரி டுவிட் செய்துள்ளனர்.
No comments: