ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை!
நீண்ட காலத்துக்குப் பின்னர், தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் அவர்களிடம் பேசுகையில், ‘தற்போதைய சிஸ்டம் சரியாக இல்லை. அதனால், மக்களுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லாமல்போய்விட்டது.
எனவே, சிஸ்டத்தைச் சரிப்படுத்த வேண்டும். நீங்கள் எல்லோரும் ஊருக்குச் செல்லுங்கள். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’, எனப் பூடகமாகப் பேசினார். அதனால், அவர் அரசியலுக்கு வருவார் என்கிற பேச்சு பலமாக அடிபடுகிறது. அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கின்றன.
முக்கியமாக, "அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், ஊழல்வாதிகளைத் தன்னருகே நெருங்கவிட மாட்டேன்" என்று ரஜினி கூறியிருந்தார். மேலும், "அப்படி அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்போதே விலகிவிடுங்கள்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
No comments: