முக்கிய பிரபலத்தின் மகன் திருமண வீட்டில் ராஜபக்ஷவினர்!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வரின் திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார்.
ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல – நட்டாலி ஆகியோருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில், அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த மஹிந்த ஆட்சியின் போது கெஹலிய ரம்புக்வெல்ல முக்கிய அமைச்சு பொறுப்பினை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: