நிர்வாணமாக மீட்கப்பட்ட கணவன், மனைவி சடலங்கள் !
ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண உடல்கள் மாலபே ரத்னாராம பிரதேசத்திலுள்ள வீடொன்னிறிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு மனித உடல்கள் நிர்வாணமாக இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையிலேயே இரு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
தகவலினடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நீண்டநேரமாக வீட்டிலுள்ளவர்களை அழைத்தும் வீடு திறக்கப்படாத நிலையில், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
இதனடிப்படையில் உள்நுழைந்தபொலிஸார், அங்கு ஆண் மற்றும் பெண் ஆகியோரின் உடல்கள் நிர்வாண நிலையில் விழுந்து இருப்பதை அவதானித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் உயிர் இருப்பதை அறிந்த பொலிஸார் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு பெண்ணின் உடலை அனுப்பி வைத்ததையடுத்து பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன், மனைவியே இவ்வாறு நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதாகவும் கணவன் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் எனவும் அவரது மனைவி ஒரு ஆசிரியையெனவும் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, இருவருக்கும் பிள்ளைகள் இல்லையெனவும் இருவரும் நீண்ட நாட்களாக தனியாக வசித்து வந்ததாகவும் குறித்த இருவரும் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளமை
No comments: