பிரான்ஸ் ஜனாதிபதி ஒரு ஓரினச்சேர்க்கையாளர்... திட்டி சர்ச்சையில் சிக்கிய அரசியல்வாதி!
புதிதாக தெரிவாகியுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை ஓரினச்சேர்க்கையாளர் என டேனிஷ் எம்பி ஒருவர் திட்டியது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
செய்தி ஊடக நேரலை ஒன்றில் டேனிஷ் மக்கள் கட்சியின் முன்னாள் எம்.பி. ஒருவர் பிரான்ஸ் நாட்டின் சமகால அரசியல் மற்றும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் குறித்தும் காரசாரமாக வாதங்களை முன் வைத்து வந்துள்ளார்.
மட்டுமின்றி தமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் தாம் கண்டிப்பாக மரைன் லீ பென்னுக்கு வாக்களித்திருப்பேன் எனவும், காரணம் வேறு விருப்பங்கள் எதுவும் இந்த தேர்தலில் மக்களுக்கு தரப்படவில்லை எனவும் அவர் பேசியுள்ளார்.
மேலும், எந்த காரணத்தைக் கொண்டும் மேக்ரோன் போன்ற ஓரினச்சேர்க்கையாளர் சிறுவனுக்கு தாம் வாக்களித்திருக்க மாட்டேன் எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார். Søren Krarup என அந்த டேனிஷ் அரசியல்வாதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதனையடுத்து விவாத நிகழ்ச்சியை நடத்திய ஊடகவியலாளரை பொதுமக்கள் கடிந்து கொண்டனர். இதுபோன்ற ஒரு நபரை விவாதத்திற்கு அழைத்தது தவறு எனவும், இதே நேரலையில் அந்த நபர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேக்ரோன் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.
ஆனால் மன்னிப்பு கேட்க மறுத்துள்ள Søren Krarup தாம் ஒழுக்கம் நிறைந்த பாடசாலைச் சிறுவன் என கூறியிருக்க வேண்டும் என மீண்டும் கிண்டல் செய்துள்ளார். குறித்த நபர் ஜனாதிபதி மேக்ரோனின் திருமண உறவு குறித்தும் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
மட்டுமின்றி தேர்தல் காலத்தில் எதிரணியினரால் பல்வேறு பொய்பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டது. அந்த கருத்துகள் அனைத்தையும் நேர்மறை பதிவுகளால் தகர்த்து சின்னாபின்னமாக்கியவர் மேக்ரோன் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: