மகிந்தவின் மே தினக்கூட்டத்தில் இருவர் பலி!
காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இரண்டு பேர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அதிக அளவிலான வெப்பம் மற்றும் களைப்பு காரணமாக 5 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் , அவர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் உயிரிழந்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டி மற்றும் நிவிதிகல பிரதேசங்களை சேர்ந்த 80 மற்றும் 62 வயதானவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
No comments: