Header Ads

Header Ads

பிரித்தானியாவை அடுத்து பிரான்ஸ் அதிரடி முடிவு எக்குமா?

ஐரோப்பிய ஒன்றியம் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை வகிக்கும் வேட்பாளர் இமானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
இல்லாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் விலகிச் செல்லும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கி வழங்கிய செவ்வியின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐரோப்பிய திட்டங்களுக்கு சீர்திருத்தம் அவசியமாக உள்ளது.
நான் ஒரு ஐரோப்பிய சார்புடையவன். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் ஐரோப்பியக் கருத்து மற்றும் கொள்கைகளை நான் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றேன்.
ஏனெனில் பிரெஞ்சு மக்களுக்கும் உலகமயமாக்கலில் நமது நாட்டிற்கும், அது மிகவும் முக்கியமானது என நான் நம்புகிறேன்.
ஆனால் அதே நேரத்தில் நாம் நிலைமையை எதிர்கொள்ள வேண்டும், நம் மக்கள் கூறுவதனை கேட்க வேண்டும். இன்று அவர்கள் கோபமடைந்திருப்பதனை காண முடிகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலிழப்பு இனியும் நிலைத்திருக்காது. ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் சீர்த்திருத்தமே எனது ஆணையாக இருக்கும் என நான் கருதுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா அண்மையில் வெளியேறி இருந்தது. இதற்கு அந்நாட்டு மக்கள் ஆணையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.