நித்தியானந்தாவுக்காக ரஞ்சிதா மீண்டும்… சென்னையில் பரபரப்பு!
நித்தியானந்தா பெயரில் சென்னை பல்லாவரத்தில் ரூ.30 கோடி மதிப்புடைய நிலத்தை அவரது சிஷ்யையான நடிகை ரஞ்சிதா, ஆக்கிரமித்து குடிசை போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தில் அரசு புறம்போக்கு கிராம நத்தத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ30 கோடி.
இந்த நிலத்தில் பல்லாவரம் கிருஷ்ணன் என்பவரும் அவரது உறவினர்களும் வீடுகள் கட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் , ராமநாதன் என்பவர் திடீரென கிருஷ்ணன் உள்ளிட்டோர் வசிக்கும் இடத்துக்கு உரிமை கோரி நீதிமன்றம் சென்றார்.ஆனால் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, நடிகை ரஞ்சிதா தலைமையில் நித்தியானந்தா சீடர்கள் கோஷ்டி ஒன்று திடீரென நேற்று பல்லாவரத்துக்கு வந்தது.
அங்கு கிருஷ்ணனை அழைத்து இது ராமநாதனின் மகளுக்கு சொந்தமான நிலம். அவர் எங்கள் மடத்துக்கு எழுதி வைத்துவிட்டார். இங்கிருந்து உடனடியாக ஓடிப் போய்விடுங்கள் என மிரட்டியுள்ளனர். இதனால் கிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் அதிர்ந்து போயுள்ளனர்.
இதனை தொடர்ந்து, ரஞ்சிதா கோஷ்டியினர், அதே குடியிருப்பு வளாகத்தில் ஒரு சிறிய குடிசை அமைத்து, நித்தியானந்தா படத்துக்கு பூஜைகள் நடத்தி டேரா போட்டுள்ளனராம். தமிழகத்தின் பல இடங்களில் நித்யானந்தா கோஷ்டி இதேபோல் அடாவடியில் ஈடுபட்டு அடிவாங்கி செல்வது தொடர்கதை ஆகிவிட்டது.

No comments: