கிளிநொச்சில் இராணுவத்தினர் மகிழ்ச்சியில்! - வெசாக் தின நிகழ்வு
இலங்கை முழுவதும் வெசாக் தின நிகழ்வு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
தென்னிலங்கை மட்டுமன்றி, தமிழர் தாயகத்திலும் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் தலைமையில் வெசாக் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய தமிழ் மக்களின் பங்களிப்புடன் கிளிநொச்சியில் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வில், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் பெருமளவில் பங்கேற்றதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரால் அஜித் காரியகரவனவின் தலைமையில் இந்த வெசாக் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
தன்சல், பக்தி பாடல், வெசாக் கூடு உட்பட அனைத்து விதமாக நிகழ்வுகளுக்கும் முன்பு ஒரு போதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வுகளின் போது எடுக்கப்பட புகைப்படங்கள் சிலவும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
No comments: