Header Ads

Header Ads

எதிர்ப்பை மீறி வடகொரியா புதிய ஏவுகணை தெரிக்கவிட்டது

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வட கொரியா இன்று காலை 5.27 மணிக்கு மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியது. எதிர்ப்பை மீறி வடகொரியா புதிய ஏவுகணை சோதனை சியோல்: வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. 


தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையும் கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய அதிபராக மூன்ஜெ-இன் பதவி ஏற்றார். தகுந்த நேரம் வரும் போது வட கொரியா சென்று அதன் தலைவர் கிம் ஜாங்-யங்கை சந்திப்பேன் என்று அறிவித்தார். 


இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை பொய்யாக்கும் விபத்தில் வட கொரியா இன்று காலை 5.27 மணிக்கு மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியது. இச்சோதனை வட மேற்கு பியாங்யாங்கில் உள்ள குசாங் பகுதியில் இருந்து நடத்தப்பட்டது. அங்கிருந்து ஏவப்பட்ட ஏவுகணை 2 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்தது. 


இதற்கு முன்பு 2 வாரத்துக்கு முன்பு வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. அது தோல்வி அடைந்தது. இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்க கூடியது அல்ல என அமெரிக்க பசிபிக் கமாண்ட் தெரிவித்துள்ளது. வடகொரியா இது போன்ற 2 ஏவுகணைகளை தயாரித்துள்ளது. அது அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டது. புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது பற்றி வடகொரியா எந்தவித தகவலும் வெளியிடவில்லை.

No comments:

Powered by Blogger.