இலங்கை செல்லும் இளையராஜா: போராட்டம் நடத்தியவர்கள் கைது
பிரபல இசையமைப்பாளரான இளையராஜா இலங்கை செல்லக்கூடாதென பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இசை உலகில் கொடிகட்டி பறக்கும் இளையராஜா இலங்கையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும், நார்வேயிலுள்ள கமல் என்பவரும் இணைந்து நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துகொள்ளக் கூடாதென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.
தமிழீழ மக்கள் அடக்குமுறைக்கு மத்தியில், உரிமைகளை இழந்த நிலையில் இருக்கும் இந்தசூழலில் இளையராஜா இசை நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments: