உலகின் மிகவும் பிஸியான விமான நிலையம் எது தெரியுமா?
உலகின் மிகவும் பிஸியாக இயங்கும் விமான நிலைமாக மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு விமான ஓடுதளம் கொண்ட விமான நிலையங்களில் அதிக பரபரப்பாக இயங்க கூடிய விமான நிலையமாக இதுவரை லண்டனில் உள்ள Gatwick Airport இருந்து வந்தது.
தற்போது லண்டன் விமான நிலையத்தை பின்னுக்கு தள்ளி மும்பையின் சத்ரபதி சிவாஜி விமான நிலையம் முதலிடத்துக்கு வந்துள்ளது.
இது மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் விமான ஆபரேட்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரமாக கருதப்படுகிறது.
மும்பை விமான நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு 837 விமானங்கள் புறப்படவோ அல்லது தரையிறங்கவோ செய்கிறது.
லண்டனின் Gatwick Airport-லிருந்து ஒருநாளைக்கு 757 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
2017 மார்ச் மாத நிதி ஆண்டு முடிவில் 45.2 மில்லியன் பயணிகளை மும்பை விமான நிலையம் கையாண்டுள்ளது.
இரண்டாமிடத்தில் உள்ள லண்டன் Gatwick Airport 44 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது.
பரபரப்பாக இயங்ககூடிய இந்த இரண்டு விமான நிலையங்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் லண்டனின் Stansted, சீனாவின் Yiamen, ஜப்பானின் Fukuoka விமான நிலையங்கள் உள்ளன.
No comments: