காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்: தந்தை- அத்தை செய்த நம்ப முடியாத செயல்
காதலித்து திருமணம் செய்த மகளை அவரது தந்தை மற்றும் அத்தை கொலை செய்து எரித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியகார்த்திகேயன். இவருக்கு சுகன்யா(21) என்ற மகள் உள்ளார். சுகன்யா செவிலியராக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
சுகன்யா அதே பகுதியைச் சேர்ந்த பூபதி (23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எண்ணி பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் ஈரோட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்தை சுகன்யா வீட்டார் ஏற்கவில்லை. ஆனால் பூபதி வீட்டார் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் திகதி ஊர் திருவிழாவிற்காக புதுமணத் தம்பதியை ஊருக்கு வருமாறு சுகன்யா வீட்டார் அழைத்துள்ளனர்.
இதனால் ஊருக்குச் சென்ற அவர்களை, சுகன்யாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் பூபதியை மட்டும் மிரட்டி துரத்தியுள்ளனர்.
அதன் பின் சுகன்யா குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இதனால் பூபதி பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சுகன்யா கொலை செய்யப்பட்டு எரித்து விட்டதாக அப்பகுதியில் தகவல்கள் பரவியுள்ளது. அதன் பேரில் பொலிசார் பெரிய கார்த்திகேயன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது பெரிய கார்த்திகேயன், அவருடைய சகோதரர்கள் மற்றும் அத்தை லட்சுமி ஆகியோர் சுகன்யாவை கொலை செய்து அங்குள்ள ஓடையில் உடலை எரித்தது தெரியவந்துள்ளது.
அதன் பின் அங்கு சென்று பொலிசார் பார்த்த போது மனித எலும்புகள் சிக்கியுள்ளன. இது பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் சுகன்யா கொலை தொடர்பாக அவரது தந்தை பெரியசாமி மற்றும் அத்தை லட்சுமியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகளையே தந்தை கொலைசெய்து எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments: