இந்திய சினிமாவின் முன்னணி நடிகருடன் ராஜமௌலி- அடுத்தப்படம் இவருடனா?
ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பாகுபலி-2 வசூல் புரட்சி செய்து விட்டது. இந்நிலையில் தற்போது எல்லோரின் கவனமும் அடுத்து இவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் நடிகர் யார் என்பது தான்.
பாகுபலி-2 ப்ரோமோஷனுக்காக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் இவர் லண்டனில் கலந்துக்கொண்டார்.
அதில் யாருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என கேட்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் ராஜமௌலி ‘ரஜினி சார் தான்.
அவருக்கான கதையை ரெடி செய்கிறேன், அதை ஓகே ஆனால், உடனே அவரிடம் கதை சொல்லி, படப்பிடிப்பிற்கு சென்றுவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.
No comments: