பெண்களே உஷார்!: இப்படியும் நடக்கின்றது…
பெண்கள் பலரை ஏமாற்றி வந்த நபரொருவரை அத்துறுகிரிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பத்திரிக்கைகளில் வெளியாகிய மணமகன் தேவை என்ற விளம்பரங்களின் ஊடாகவே குறித்த நபர் பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.
அவர் நீண்டகாலமாக பெண்களிடமிருந்து பணத்தை அபகரித்து வந்துள்ளார்.
சந்தேகநபர் 44 வயதானவர் எனவும், அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றள்ளமையும் தெரியவந்துள்ளது.
காஹாடகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், அப்பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அவரது மனைவி வெளிநாட்டில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரை கைது செய்தபோது 2 மில்லியன் ரூபா வரை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அந்நபர் பல பெண்களை தொடர்ச்சியாக மோசடி செய்து வந்துள்ளார்.
குரலை மாற்றிப்பேசுதல் , நண்பர்களின் அடையாள அட்டை மூலம் சிம் கார்ட்களை பெற்றுக்கொண்டுள்ளமை என பல தந்திர செயற்பாடுகள் மூலம் மோசடியை முன்னெடுத்து வந்துள்ளார்.
பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டை அடுத்தே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் தான் ஏமாற்றிய பெண்களின் எண்ணிக்கை தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
No comments: