அக்டோபர் மாதம் 27-ந் தேதி பாவனாக்கு திருமணமா!
பிரபல நடிகை பாவனா மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா அதில் இருந்து மீண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
மேலும் சினிமா பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலருமான நவீனை திருமணம் செய்யும் முடிவுக்கும் வந்தார். இதைத் தொடர்ந்து நடிகை பாவனா – நவீன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் எளிமையாக நடைபெற்றது.
இந்த நிலையில் இவர்கள் திருமணத்தை வருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி திருச்சூரில் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்து உள்ளனர். மேலும் திருமண வரவேற்பை கொச்சியில் நடத்தவும் தீர்மானித்து உள்ளனர்.
வருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி எனது திருமணம் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது. எனது திருமணத்தில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ இருக்காது. அதிக விலை உயர்ந்த நகைகளை திருமணத்தன்று அணியவும் எனக்கு விருப்பம் இல்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைக்க உள்ளோம்.
திரையுலகை சேர்ந்தவர்களில் யார்-யாரை அழைப்பது என்பதை நவீனுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். திருமணத்துக்கு பிறகு நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். நான் நடிப்பை தொடர்வதில் நவீனுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என நடிகை பாவனா கூறியுள்ளார்.
No comments: