சீனாவின் நட்பு ஒன்றும் தேவையில்லை: வடகொரியா திட்டவட்டம்
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதன் காரணமாக வடகொரியா மீது அமெரிக்கா பல்வேரு பொருளாதார தடைகளை அவ்வப்போது கொண்டு வருகிறது.
அமெரிக்கா மட்டுமின்றி வடகொரியாவின் நட்பு நாடு என்று கூறப்படும் சீனாவும் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதனால் சீனா, வடகொரியாவை கடுமையாக விமர்சித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் வடகொரியா சீனாவின் நட்புக்காக நாங்கள் ஒன்றும் கெஞ்சி நிற்கமாட்டோம் என்று கூறியுள்ளது.
No comments: