இளவரசர் ஹரியின் நிஜ தந்தை யார்? வெளியான உண்மை
பிரித்தானிய இளவரசர் ஹரியின் தந்தை டயானாவின் காதலரலான James Hewitt இல்லை என்பது அவர்களின் உடல் அடையாள ஒற்றுமையின்மை மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய இளவரசி டயானா கடந்த 1992ல் தனது கணவர் சார்லஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்தார்.
அதன் பின்னர், ராணுவத்தில் பணிபுரிந்த James Hewitt என்பவருடன் டயானாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
டயானாவுக்கும், Jamesக்கும் பிறந்தவர் தான் இளவரசர் ஹரி என பலசமயம் கிசுகிசுக்கப்படுவதுண்டு.
அதிலும், முக்கியமாக ஹரி மற்றும் James ஆகிய இருவரின் தலை முடியும் சிவப்பு நிறமாக இருப்பதால் அவர்கள் தந்தை- மகன் என தகவல்கள் பரவியது
ஆனால், ஹரி தனது மகன் கிடையாது என James இரு மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் இருவரின் உடல் தோற்றங்கள் மற்றும் அடையங்கள் குறித்து ராஜ வம்சத்துக்கு நெருக்கமான நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஹரி, சார்லஸ் மகன் தான் எனவும் James மகன் கிடையாது எனவும் தெரியவந்துள்ளது.
அதற்கான ஆதாரங்களும் கூறப்பட்டுள்ளன.
அதாவது, ஹரியின் கண்கள் நீல நிறமாகவும், Jamesன் கண்கள் பழுப்பு நிறத்திலும் உள்ளது.
அதே போல Jamesன் பற்கள் பெரும்பாலான பிரித்தானியர்களை போல பெரிதாகவும், ஹரியின் பற்கள் சின்னதாகவும் உள்ளன.
மேலும், ஹரிக்கு புருவம் குறைவாகவும், Jamesக்கு அதிகமாகவும் உள்ளது.
இளவரசர் ஹரிக்கு தாடி சிவப்பு நிறமாக உள்ளது, ஆனால் Jamesக்கு அப்படி இல்லை.
டயானா மற்றும் சார்லஸ்க்கு சிவப்பு நிறத்தில் தலை முடி இல்லாமல் இருந்தாலும், டயானாவின் சகோதரர் Earl Spencerக்கு சிவப்பு நிற முடி உள்ளதால் அந்த ஜீன்கள் மூலம் ஹரிக்கு சிவப்பு நிற முடி இருக்க வாய்ப்புள்ளது.
அதே போல ஹரிக்கு சுருட்டை முடியாகும், ஆனால் Jamesக்கு அப்படி இல்லை.
James மற்றும் ஹரி இருவருக்கும் ஒற்றுமையாக இருக்கும் ஒரே விடயம் கன்னம் மட்டும் தான்.
என்ன தான் ஹரிக்கு தனது தந்தை சார்லஸ் மற்றும் தாத்தா பிலிப்புக்கு இருப்பது போன்ற முடி இல்லையென்றாலும், மூவருக்கும் சிறிய கண்களும், அதுவும் மூக்கின் அருகிலேயே உள்ளன.
உயரம் விடயத்திலும், மூவருக்கும் ஒற்றுமை உள்ளது.
ஹரி 6 அடி 2 அங்குலமும், சார்லஸ் 5 அடி 10 அங்குலமும், பிலிப் 6 அடி உயரத்திலும் கிட்டதட்ட சமமாக உள்ளார்கள்.
அதே போல ஹரியின் காதும் அவர் சகோதரர் வில்லியம் காதும் சம அளவிலேயே உள்ளது.
இதன் மூலம் ஹரி சார்லஸ் மகன் தான் எனவும், Jamesக்கு பிறந்தவர் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் பிரித்தானியர்களிடம் ஓன்லைனில் ஹரியின் தந்தை யார் என நடத்தப்பட்ட ஆய்வில், 50 சதவீதம் பேர் James தான் ஹரியின் தந்தை எனவும், 34 சதவீதம் பேர் மட்டுமே ஹரியின் தந்தை சார்லஸ் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: