இன்று பிற்பகல் வடகொரியா ஏவிய ''இனம்புரியாத'' ஏவுகணை!
வடகொரியாவின் நேரப்படி இன்று பிற்பகலில் இனம்புரியாத ஏவுகணையொன்றை வட கொரியா வானில் ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை வடகொரியா ஏவிய Hwasong-12 என்ற ஏவுகணை 700 கிலோ மீற்றர் தூரம் சென்றதாகவும் இன்று ஏவப்பட்ட இனம்புரியாத ஏவுகணை 500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தில் வடகொரியாவினால் ஏவப்பட்ட 10 ஆவது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: