முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! மெரினாவில் கைதுகள்
சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த 12பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவாக, மே 17 இயக்கம் சார்பில், மெரினாவில் அஞ்சலி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே மெரினா கடற்கரையில் சட்ட விதிகளை மீறி, கூடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்தது.
குறிப்பாக, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை நேற்று கூறியது. மேலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி, இன்று மாலை 5 மணிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கூறினார். ’நினைவேந்தல் கூட்டத்துக்கு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும்.
சிறை செல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையுமில்லை. தடியடியை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம். நிச்சயம் 150-க்கும் மேற்பட்ட அமைப்புகள், இன்று மெரினாவில் ஒன்று கூடுவோம்’ என்று திருமுருகன் தெரிவித்தார்.
திருமுருகன் கூறியப்படி இன்று மாலை 4 மணியளவில் மே 17 அமைப்பினர் மெரினாவில் கூடத் தொடங்கினர். இதனைத்தொடர்ந்து காவல்துறை 12 பேரை கைதுசெய்து அழைத்து சென்றுள்ளது.
No comments: