Header Ads

Header Ads

சித்தியின் திருமணத்தில் அழகாக ஜொலித்த பிரித்தானிய குட்டி இளவரசர் , இளவரசி !

பிபா மிடில்டனின் திருமணத்தில் கலந்து கொண்ட குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லோட் ஆகிய இருவரும் அழகு பதுமைகளாக ஜொலித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்கள்.
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் இளைய சகோதரியான பிபா மிடில்டனுக்கும், பிரபல கார் ரேசரான ஜேம்ஸ் மேத்யூஸ்க்கும் கடந்த வருடம் ஜூலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
இதையடுத்து நேற்று இருவருக்கும் St. Mark தேவாலயத்தில் திருமணம் கோலாகலமாக நடைப்பெற்றது.
பிபாவின் சகோதரியான கேட் மிடில்டனும், அவர் கணவரான இளவரசர் வில்லியமும் அவர்களின் இரு குழந்தைகளுடன் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
வில்லியமின் சகோதரர், இளவரசர் ஹரியும் திருமண நிகழ்வில் பங்கேற்றார். திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் ஒட்டு மொத்த பார்வையும், குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லோட் மீதே இருந்தது.
காரணம், ராஜவம்ச வழக்கப்படி இருவரும் தங்கள் சித்தியான பிபா மிடில்டனுடன் திருமண நிகழ்வின் போது உடன் இருக்க வேண்டும்.
அதன்படி சார்லோட் வெள்ளை நிற ஆடையில் தேவதையாக ஜொலித்தார். அவரின் சகோதரரான குட்டி இளவரசர் ஜார்ஜ் வெள்ளை நிற சட்டை மற்றும் பச்சை நிற பேண்டில் அழகாக இருந்தார்.
அவர்களுடன் இன்னும் சில குழந்தைகளும் அதே போன்ற உடைகளுடன் அழகாக வலம் வந்தார்கள்.
குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் குட்டி இளவரசி சார்லோட்டுடன் இருந்த அவர்களின் அம்மா இளவரசி கேட் அவர்களை உடனிருந்து கவனித்து கொண்டார்.

No comments:

Powered by Blogger.