காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்த ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தின் டைட்டில் வெளிவந்தது. மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் படம் காலா கரிகாலன்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளிவந்தது. இந்த போஸ்டரை கவணிக்கையில் ரஜினிகாந்தின் தளபதி படத்தில் டைட்டில் டிசைன் போலவே உள்ளது.
மேலும் காலா மட்டுமின்றி கரிகாலன் என்ற வார்த்தையும் இணைக்கப்பட்டுள்ளது, ரஜினி மக்களுக்காக போராடுவது போல் தான் கதை இருக்கும் என தெரிகின்றது. கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா, இந்த பெயர் ரஜினிக்கு பிடிக்கும் என்பதால் இதை வைத்துள்ளார்களாம்.
ஏனெனில் டைட்டில் சிவப்பு கலரில் இருப்பது கம்னியூஸ்ட்டை குறிப்பது போல் உள்ளது கிசுகிசுக்கப்படுகின்றது. ’காலா’ என்பது எமனையும் குறிக்கும்.
No comments: