லண்டன் ரயில் நிலையத்தில் ஒலித்த அலாரம்: தெறித்து ஓடிய பயணிகள்
பிரித்தானியா தலைநகர் லண்டன் ரயில் நிலையத்திலிருந்து மக்கள் தெறித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள விக்டோரியா ரயில் நிலையத்தில் எச்சரிக்கை ஒலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தில் திடீரென தீ எச்சரிக்கை அலாரம் எழுப்பப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர், விக்டோரியா ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சம்பவம் குறித்து பயணி ஒருவர் கூறியதாவது, விக்டோரியா நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றனர்.
தற்காலிகமாக மூடப்பட்ட ரயில் நிலையம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments: