Header Ads

Header Ads

இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்ற தமிழ் பெண்ணின் சாதனை!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதி ஒருவரின் சாதனை தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹம்சிகா பிரேம்குமார் என்ற 23 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த யுவதி தற்போது மருத்துவ பீடத்தில் கற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்படுகின்றார்.
பெர்கன் செஞ்சிலுவை அமைப்பு, நோர்வே புற்றுநோய் சமுதாயம், மற்றும் SOS குழந்தைகளின் கிராமங்கள் போன்ற பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், தனது வாழ்க்கையின் வெற்றிப் பயணம் தொடர்பிலும் தன் அனுபவங்களும் ஹம்சிகா பகிர்ந்துள்ளார்.
"உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றமையால் உயிருக்கு பயந்து 2002ஆம் ஆண்டு புகலிடம் கோரி நோர்வே சென்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் வாழ்வதற்கே பயமாக இருந்தது. மருத்துவமனையிலோ, பாடசாலைகளிலோ பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற அச்ச நிலை நிலவியது.
மேலும், ஒன்பது வயதை அடைந்த போது, குடும்பத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தேன்" என்றும் ஹம்சிகா கூறியுள்ளார்.
தற்போது நோர்வேயில் வசிக்கும் ஹம்சிகா பிரேம்குமார், அவரது பயணத்தின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டு அனைவரையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எண்களாகவோ, புள்ளியியல் போன்றோ மனிதர்களை பார்க்காமல், மனிதர்களை மனிதர்களாக கருதப்பட வேண்டும் என ஹம்சிகா அனைவருக்கும் நினைவூட்டியுள்ளார்.

No comments:

Powered by Blogger.