கடற்பரப்பில் பதற்றம்.. விரட்டியடிக்கப்பட்ட சீன கப்பல்
இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பலை கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கச்சத்தீவு பகுதியில் சீனா கடற்படை முகாமிட்டு இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் சீன கப்பல் ஒன்று நுழைய முயற்சி செய்துள்ளது.
தொடர்ந்து கப்பலை நோக்கி இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பதிலுக்கு சீன கப்பலில் இருந்தவர்களும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
முடிவில் சீன கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளது, எனினும் இதுகுறித்து கடலோர கடற்படை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
No comments: