Header Ads

Header Ads

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் மர்ம மரணம்.... மயங்கிய நிலையில் மனைவி மீட்பு!!

அத்­து­ரு­கி­ரிய ஹோகந்­தர ரத்­னா­ராம பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்­றி­லி­ருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுசந்த டி சில்வா மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் அவ­ரது மனைவி மயங்கி கிடந் ­த­தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 தெற்கு ஹோகந்­தர ரத்­னா­ராம வீதியில் அமைந்துள்ள வீடொன்­றி­லி­ருந்து துர்­நாற்றம் வீசு­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்ற தக­வ­லுக்­க­மைய குறித்த இடத்­துக்கு சென்று பார்த்­த­போது குறித்த வீட்­டி­லி­ருந்து 68 வய­தான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரின் சடலம் நிர்­வா­ண­மாக மீட்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் மனை­வி­யான 70 வய­தான பெண்ணும் நிர்­வா­ண­மாக வீட்­டினுள் மயங்­கிக்­கி­டந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

 மாலபே ரத்­னா­ராம வீதியின் 5ஆம்­கு­றுக்கு வீதியில் வசித்­து­வந்த சுசந்த டி சில்வா என்ற ஓய்வு பெற்ற பொலிஸ் அத்­தி­யட்­சகரே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ரெ­னவும், அவ­ரது மனை­வி­யான நிரஞ்­சலா விஜே­சிறி என்ற முன்னாள் ஆசி­ரி­யையே இவ்­வாறு மயங்கிக் கிடந்­த­வ­ரெ­னவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

நேற்­று­ முன்­தினம் அய­ல­வர்கள் குறித்த வீட்­டினுள் இருந்து துர்­மணம் வீசு­வ­தனை அவ­தா­னித்து வீட்­டுக் ­க­தவை தட்­டிய போது திறக்­கப்­ப­டா­மை­யினால் அவ் ­வீட்டின் தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்பு விடுத்­த­போதும் பதில் கிடைக்­கா­ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்­த­போது மேற்­படி தம்­ப­தி­யினர் வீழ்ந்து கிடப்­ப­தனை கண்டு அத்­து­ரு­கி­ரிய பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்­ளனர். சம்­பவ இடத்­துக்கு பொலிஸார் சென்று பார்த்­த­போது முன்னாள் பொலிஸ் அதி­கா­ரியின் உடல் துர்­ம­ணத்­துடன் கட்­டி­லுக்கு அருகில் கிடந்­த­துடன் அவ­ரது மனைவி கத­வுக்கு அருகில் மயங்கிக் கிடந்­துள்ளார்.

 அதன்­போது பிரேத பரி­சோ­தகர் அப்­ பெண்ணின் அருகில் சென்று சத்­த­மிட்­ட­போது அவ­ரது உடலில் அசைவு ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­செல்­லப்­பட்டார்.

 இத் ­தம்­ப­தி­யினர் அய­ல­வர்­க­ளு­டனோ உற­வி­னர்­க­ளு­டனோ நெருக்­க­மாக தொடர்பைக் கொண்­டி­ருக்­க­வில்லை என வும், ஓய்வு பெற்ற அதி­காரி பாரி­ச­வா­தத்­தினால் பாதிக்கப்பட்­டி­ருந்­த­தா­கவும் இத் தம்பதிக்குப் பிள்­ளைகள் எவரும் இல்­லை­யெ­னவும் தெரி­ய­வந்­துள்­ளது. பொலிஸார் வீட்டில் மேற்­கொண்ட சோத­னைக்­க­மைய வீட்டின் அரை­வா­சிப்­ப­குதி சுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் எவ்­வித தடயப் பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

 இதே­வேளை குறித்த அதி­கா­ரியின் சடலம் மீட்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­துள்ள நிலையில், அவ­ரது மனைவி இரண்டு நாட்­க­ளாக வீட்­டி­னுள்­ளேயே மயங்­கிக்­கி­டந்­தமை பொலி­ஸா­ருக்கு சந்­தே­கத்தை தோற்­று­வித்­துள்­ளது.

அத்­துடன் மேற்­படி இரு­வரும் எதற்­காக நிர்­வா­ண­மா­கினர் என்­பது தொடர்­பிலும் சரி­வர தெரி­ய­வ­ர­வில்லை. வீட்டில் கொள்ளைச் சம்­ப­வங்கள் எவையும் இடம்­பெற்­ற­தற்­கான சான்­று­களும், சாட்­சி­களும் தென்­பட்­டி­ருக்­க­வில்­லை­யென பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

 வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட் டுள்ள பெண் சுய­நி­னை­வுக்குத் திரும்பும் வரையில் எவ்­வித தக­வல்­க­ளை யும் தெரி­விக்க முடி­யாது எனத் தெரி­விக்கும் அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் மேல­திக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.