தற்கொலைக்கு இதுதான் காரணம்: மாப்பிள்ளை சீரியல் நடிகை விளக்கம்
சின்னத்திரை நடிகையும், செய்தி வாசிப்பாளருமான ப்ரியா தற்கொலை சம்பவங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி விவரிக்கிறார்.
அவர் கூறுகையில், சாதாரண பெண்களுக்கும், சீரியலில் நடிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ரியலையும், ரீலையும் ஒன்றாக சேர்க்கக் கூடாது.
சீரியலில் நடிக்கும் கணவன், மனைவி பொது இடங்களில் செல்லும் போது, ரசிகர்கள் பேசுவதை தவறாக கருதாமல், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது நடப்பதை குடும்பத்தினர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
அப்படி இருந்தால் ஒரு பிரச்சனைகளுமே வராது. அந்த வகையில் இரவு வீட்டிற்கு தாமதமாக வந்தாலும், நமக்கென்ற ஒரு மரியாதை கொடுத்தால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது.
ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து வாழ்தல், பொறுமை, புரிதல் ஆகிய குணங்களை பற்றி தெரிந்துக் கொண்டால் இரவில் உறங்கும் போது ஒரு நிம்மதி கிடைக்கும்.
குறிப்பாக தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் பெற்றோர்கள் கேள்வி கேட்பது, சகிப்புத்தன்மை, பொறுமை, புரிதல் போன்ற குணங்களை எதுவுமே இல்லாததால் தான் தற்கொலைக்கான முயற்சிகளை எடுக்கின்றார்கள்.
வாழ்வில் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும், அதை எதிர்த்து போராடும் மனப்பக்குவத்தை பெற்று பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் என்பதே தனது கருத்து என்று கூறியுள்ளார்.
No comments: