இறுதி நிமிடங்களில் தாயிடம் பேசியது என்ன ?
இங்கிலாந்தின் மேன்செஸ்டர் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய சல்மான் அபேதி (22) இறுதி நிமிடங்களின்போது தனது தாய்க்கு அழைப்பினை மேற்கொண்டு தனது செயலுக்காக மன்னித்துக்கொள்ளுமாறு வேண்டியதாகத் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட 24 மணிநேரத்தினுள் தாக்குதல்தாரி சல்மான் தான் என்று அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து லிபியாவில் உள்ள அவரது பெற்றோர், சகோதரர்களையும் பொலிஸார் விசாரணை வளையத்தினுள் கொணர்ந்தனர். குறிப்பாக, சல்மானின் தந்தையும் இளைய சகோதரரும் திரிபோலியில் வைத்து கைது செய்யப்பட்டனர். சல்மானின் தாய் மற்றும் ஏனைய இரண்டு சகோதரர்களும் லிபியாவில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது,
சம்பவ தினத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே சல்மான் இங்கிலாந்துக்குச் சென்றதாகவும், குண்டை வெடிக்கச் செய்வதற்குச் சில நிமிடங்கள் இருக்கும்போது தன்னை அழைத்து தனது செயலுக்காக தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டதாகவும் சல்மானின் தாய் கூறியுள்ளார்.
No comments: