காரில் வெடிகுண்டு? பிரான்சில் பரபரப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கார் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Place de la République-பகுதியில் கார் ஒன்று வெகுநேரம் ஆகியும் யாரும் அந்த காரை எடுக்க வரவில்லை. இதனால் சற்று பதற்றமடந்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் கேட்பாரற்று இருக்கும் காரில் வெடிகுண்டு இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால், அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றியுள்ளதாகவும். அந்த காரை சோதனை செய்து வருவதாகவும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பிரான்சில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: