படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் - பிரியங்கா
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இதில், ராக் என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர் வெயின் ஜாக்சனோடு அவர் நடித்துள்ள பே வாட்ச் என்கிற படம் நாளை அமெரிக்காவில் வெளியாகிறது.
இந்தியாவில் இப்படம் வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இவர் வில்லியாக நடித்துள்ளார். எனவே, வழக்கமாக ஆங்கில படங்களில் உச்சரிக்கப்படும் எஃப் கெட்டவார்த்தை அதிமாக பேசி இப்படத்தில் நடித்துள்ளாராம். அதன் காரணமாக,
இந்த படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் என பிரியங்கா வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார்.
No comments: