Header Ads

Header Ads

ஆசியாவில் முதல்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி..! எந்த நாடு தெரியுமா ?

ஆசியப்பிராந்திய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பொன்றை தாய்வான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் ஓரினச்சேர்க்கைக்கு தடைவிதிக்குமரசின் உத்தரவை எதிர்த்து தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தடுப்பது, பொதுமக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு ஈடாகுமெனவும், அதனால் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளிக்கும்படி அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. 


அத்தோடு மனித பகுத்தறிவு வாதங்களை கருத்திற்கொண்டு, ஓரினச்சேர்க்கைக்கு ஏற்புடைய சட்டங்களை உருவாக்கும்படியும் பணித்துள்ளது. இதன் மூலம் ஆசிய நாடுகளில் முதலாவது ஓரினசேர்க்கையை அங்கீகரித்த நாடாக தாய்வான் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.