மன்செஸ்டர் அரினா தாக்குதல் தொடர்பிலான சந்தேகநபர்கள் எழுவர் கைது
பிரித்தானியா மன்செஸ்டர் அரினாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கும்பலை தேடி பாரிய தேடுதல் வேட்டையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இதன் அங்கமாக இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மென்செஸ்டர் அரினாவில் கடந்த திங்கட் கிழமை மன்செஸ்டர் அரினா அரங்கில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
குறித்த அரங்கில் அமெரிக்க பொப் இசை பாடகியான அரியான கிராண்டேயின் இசைநிகழ்ச்சின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததோடு 64 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலை சல்மான் அபேடி என்ற நபரே நடத்தியதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபரின் தந்தையும் சகோதரரும் லிபியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments: