முள்ளிவாய்க்காலில் சந்தேக நபர்களின் நடமாட்டம் !
முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சந்தேக நபர்களின் நடமாட்டம் அண்மைய நாட்களாக அதிகமாக காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களின் நடமாட்டம் இன்று அதிகமாக காணப்பட்டதாக பொதுமக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் குறித்த சந்தேக நபர்களின் நடமாட்டம் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
அடையாளம் தெரியாதவர்களின் நடமாட்டம் வீதிகளில் காணப்பட்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கும்படி பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: