வெள்ளவத்தையில் குவிக்கப்படும் இராணுவத்தினர்!
வெள்ளவத்தையில் ஏழு மாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தமையினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழை பெய்கின்ற நிழையிலும் வெள்ளவத்தையில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்ப்படுகின்றது.
வெள்ளவத்தை சார்லிமென்ட் வீதியில், அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டு மாடிகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. ஆனால் மீதமுள்ள ஏழு கட்டடங்கள் இன்னும் கட்டுமானத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் விஜயம் மேற்கொண்டு வருகின்றனர். இதன்போது கட்டட நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments: