பிரான்ஸ் நாட்டின் வீதிகளில் மகிந்த - பொன்சேகா
முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலிசெய்யும் நிகழ்வுகள் உலகெங்கும் வாழும் தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது அமைதியான முறையில் பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
இதன்போது, உணர்வெழுச்சியுடன் வீதி நாடகங்களும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களால் வீதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் சரத் பொன்சேகா போன்ற வேடத்திலும் உடை அணிந்து பேரணியில் கலந்துக்கொண்டுள்ளனர்.
தமிழ் இனத்தின் மீது அரசாலும் அதன் படைகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய மிக மோசமான படுகொலையின் பெரும் துயரை படம் பிடித்து காட்டுவது போலவும் வீதி நாடகங்கள் காணப்படுகின்றது.
No comments: