கிளிநொச்சியில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தைச் சேர்ந்த 22 வயதான பாலசுப்ரமணியம் விஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: