மான்செஸ்டரை தொடர்ந்து லண்டனில் வெடிகுண்டு பீதி...பேருந்து நிலையம் மூடல்
லண்டன் பேருந்து நிலைய வளாகத்தில் கிடந்த மர்ம பொட்டலத்தால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டதை அடுத்து பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.
விக்டோரியா கோச் பேருந்து நிலைய வளாகத்தில் மர்ம பொட்டலம் ஒன்று இருப்பதை கண்டறிந்த பொலிசார், மக்கள் அனைவரையும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றி உடனே பேருந்து நிலையத்தை மூடியுள்ளனர்.
இதனையடுத்து, மர்ம பொட்டலத்தை கைப்பற்றிய பொலிசார் அதை சோதனை செய்து வருகின்றனர்.
மான்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து விக்டோரியா கோச் நிலையத்தில் மர்ம பொட்டலம் காணப்பட்டது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
No comments: