Header Ads

Header Ads

கெடு முடிந்தது! வெள்ளை மாளிகை வெடித்து சாம்பலாகும்: வட கொரியா

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விரைவில் வெடித்து சாம்பலாகும் என வடகொரியா அறிவித்துள்ளது.
வட கொரியா - அமெரிக்கா இடையே எந்நேரத்திலும் போர் தொடங்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், வட கொரியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா வட கொரியாவின் தலைநகர் Pyongyangஐ அழிக்க திட்டமிட்டுள்ளது.
இதை பொருத்து கொள்ள முடியாது. அதற்கு பதிலடியாக நாங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை வெடித்து சாம்பலாக்குவோம் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், 330,000 அமெரிக்க ராணுவத்தினர் வட கொரியாவுடன் போர் தொடுக்க ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
குற்றங்கள் நிறைந்த அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் வரலாறு விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவிக்கபட்டுள்ளது.
தீமையின் உருவம் அமெரிக்கா என விமர்சித்துள்ள வட கொரியா, நாங்கள் நடத்த போகும் அணு ஆயுத தாக்குதலில், உலகின் சக்தி வாய்ந்த நாடாக திகழும் அமெரிக்கா மீண்டும் இயல்பு நிலைக்கு எழ முடியாத அளவுக்கு மாறி விடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், வட கொரிய மக்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தியவர் கிம் ஜாங் எனவும் அந்நாட்டு மீடியா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
ஏற்கனவே பல முறை ஏவுகணை பரிசோதனையை வட கொரியா நடத்தியுள்ள நிலையில், விரைவில் ஆறாவது முறையாக அணு குண்டு பரிசோதனையை நடத்தவுள்ளது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

No comments:

Powered by Blogger.